எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டிற்கு வராத VNS நகர் பூங்கா. விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீ.என்.எஸ். நகர் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பொதுமக்கள் அமரும் மேடை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் மீதமுள்ள பணிகள் பொதுமக்கள் சுற்றி வரும் நடைபாதை பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது சுமார் 33.80 லட்சம் மதிப்பீட்டில் 2022-23ஆண்டில் பணிகள் நடைபெற்று தற்போது வரை பணிகள் முழுமையாக நடைபெற்று பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது மேலும் இந்த பூங்கா நகர் பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றியுள்ள நகர்வாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை