திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் பத்ரதீப விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் .அலங்கார தீபங்கள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.