பெரியகுளம் அருகே தாமரைக் குளம் தென்கரை பேரூராட்சி மன்ற புதிய தார் சாலைக்கு எம் .பிதலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் மற்றும் தென்கரை பேரூராட்சி பகுதிகளில் புதிய தார்சாலை அமைப்பதற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்
மேலும் தார் சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக்குளம் ச.பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் திமுக பிரமுகர் முல்லை சேகர் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூர் திமுக செயலாளர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்