விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரவுண்டானா பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ராஜபாளையம் சர்வோதய சங்கம் சார்பில் மேலாளர் கந்த குரு தலைமையில் முன்னாள் மேலாளர் வி.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சமூக சேவகர் பகிர்வு அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார், காந்தியவாதி வி.கே. பீமராஜா உள்பட சர்வோதய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.