கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநகராட்சி நகராட்சி சார்பில் வரி வசூல் செய்யும் பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்துவதையும், ஆய்வு கூட்டம் என்ற பெயரில் பணியாளர்களை அச்சுறுத்தும் போக்கினை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை தலைவர் எழிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.