எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
வாலிகண்டபுரத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள தவறு சரி செய்யப்படுமா?
பெரம்பலூர்.ஜன.30. ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களின் பெயரையும், செல்லும் தூரத்தையும் கணக்கிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பாக பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிண்டபுரத்திலிருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் பெயர் பலகை ஒன்று உள்ளது.
அதில் வாலிண்ட புரத்தில் இருந்து பெரம்பலூருக்கு 8 கிலோமீட்டர் என்று இருக்க வேண்டும். ஆனால் தவறுதலாக 16 கிலோமீட்டர் என்று இருக்கின்றது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக பெயர் பலகையில் தவறுதலாக உள்ள பெரம்பலூர் 18 கிலோமீட்டர் என்பதை எடுத்துவிட்டு 8 கிலோமீட்டர் என்பதை பதிவு செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.