துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாபெரும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் ஜனவரி 1ந் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

துறையூரில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணியை துறையூர் சார்பு நீதிபதி எம்.ஜெய்சங்கர், குற்றவியல் நீதிமன்ற நடுவர் நர்மதா ராணி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார்,காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், ரவிச்சந்திரன் ,போக்குவரத்து உதவி ஆய்வாளர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கரையில் தொடங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் ரோடு, சிலோன் ஆபீஸ், செங்குந்தர் பள்ளி சாலை, மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு ,பேருந்து நிலையம், முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா வரை சென்று நிறைவு பெற்றது.

இதில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் இருசக்கர வாகன ஓட்டிகள், காவல்துறையினர், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர்,ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வேன் ஓட்டுனர்கள்,ஜேசிஐ நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து இந்த பேரணியில் கலந்து கொண்டன.

இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

வாகனங்களில் இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *