கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி முல்லை நகர் பகுதி அதிக குடியிருப்பு சூழ்ந்த பகுதியாகும். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்டப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கழிவு நீர் கால்வாய் ஆனது கட்டப்பட்ட நிலையில் தற்போது அந்த கழிவு நீர் வெளியே செல்லாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி பொதுமக்களின் நலனை காத்திட வேண்டும் என்றும் அதேபோல் கழிவுநீர் செல்ல வழிவகை செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.