தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார நிறைவு விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமை வகிக்கவும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் கே எஸ் சரவணகுமார் முன்னிலையிலும் மனிதநேய வார நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வியாழக்கிழமை வரை மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது
மனிதநேயம் என்பது சக மனிதர்களிடத்தில் அன்பு காட்டுவது மட்டுமல்ல பிற உயிர்களிடத்திலும் நாம் மனிதநேயத்தினை கடைப்பிடித்து இரக்க குணத்துடன் செயல்பட வேண்டும் பிறருக்கு உதவுதல் கோபம் பொறாமை வெறுப்பு குற்றம் காணுதல் போன்ற தீய குணங்களை தவிர்த்து சக மனிதர்களிடம் அன்பாக இருக்க பழகுவதே மனிதநேயமாகும்.
மனிதநேயத்துக்கும் காலம் மாற்றத்திற்கும் தொடர்பு உண்டு ஏனெனில் மனிதன் தன் தேவைகளுக்கு அதிகமாக இயற்கை வளங்களை பயன்படுத்துவதாலும் பிளாஸ்டிக் மற்றும் இரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் வளமும் வனவிலங்குகளும் பாதிக்கப்படுகிறது
எனவே இயற்கை வளங்களின் மீதும் அக்கறை கொண்டு அதனை நாம் அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கவும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதைவிட மனிதநேயத்துடன் வாழ்வது சிறந்த வாழ்க்கை என்று நம் இந்திய திருநாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியது போல் நாமும் மனிதநேயத்துடன் வாழ்வோம் மேலும் மனிதநேய வார விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார் இதனைத் தொடர்ந்து மனிதநேய வார விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த அருமையான மனிதநேய வார நிறைவு விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் சரளா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலக்கலும் உறுப்பினர்கள் மாணவ மாணவியர்கள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.