வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
திருவாரூர் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில்பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்தும் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றி இன்று திருவாரூரில் நடைபெற்றது
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார் இதில் சோழமண்டலம் சார்பாக கும்பகோணத்தில் நடைபெறுவதால் ஒன்றிய வாரியாக பஞ்சாயத்து வாரியாக பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக மாவீரன் ஜெ.குரு அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் இருவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்
1.திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக 300 வாகனங்களில் 150 வாகனங்களில் மகளீர் 150 வாகனங்களில் ஆண்கள் உட்பட ஐநூறு இருசக்கர வாகனங்களி மொத்தம் 3000 பேருக்கு மேல் கலந்து கொள்வோம் என்றும்
2. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றி கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளதால் அவற்றை முறையாக வெளியேற்றி அதனை உடனடியாக சரி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது,
3.திருவாரூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புதிதாக ஓடும்போக்கை ஆற்றில் அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும் எனவும்,
4.மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முறையான நிவாரணம் வழங்கவும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வாங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும்,
5.அறுவடை காலம் தொடங்கியதால் அறுவடை செய்வதற்கு மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறைய போக்க அரசே இயந்திரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,
6.வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு 21 தியாகிகளுக்கும் மணிமண்டபம் திறந்து தமிழக அரசு நாடகமாடுகிறது இதனை வன்மையாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும்
7.தமிழக அரசுக்கு உண்மையாக வன்னியர்கள் மீது அக்கறை இருந்தால் வன்னியர் இட ஒதிக்கீட்டை சாதிவாரி கணக்கெடுத்து உடனே அறிவிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி , வன்னியர் சங்க மாநில செயலாளர் அய்யாசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல பொறுப்பாளர் எஸ். ஏ. ஐயப்பன், தஞ்சை மாவட்ட செயலாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலின் மற்றும் , வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குமார் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் மாநில செயற்குழு உறுப்பினர் வேணுகோபால் மற்றும் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.