பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி பண்டாரவாடை புனித காணிக்கை அன்னை தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதுசமயம் மாலையில் கொடி ஊர்வலம் , கொடியேற்றம் இரவு பூ அலங்காரம் பேண்ட் இன்னிசை தாரை தப்பட்டை வாண வேடிக்கையுடன் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி அதி விமர்சையாக நடைபெற்றது.
பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்கு தந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் பாடல் குழுவினர் திருப்பலி நடைபெற்றது இவ்விழாவில் பங்கு தந்தை, ராஜகிரி பண்டாரவடை கிராம தலைவர்கள்,ஊர் பொதுமக்கள், பஞ்சாயத்தார்கள்,
இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.