காஞ்சிபுரத்தில் அப்போலோவின் மூட்டு எலும்பு ஆலோசனை முகாம் காஞ்சிபுரம்: ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனைகள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனது மருத்துவ தகவல் மையத்தில் தொடர்ந்து அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை வழங்கி வருகிறது. இன்று நடைபெறும் ஆலோசனையில் மூத்த எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் Dr ராகேஷ் B ஷெட்டி அவர்கள் ஆலோசனை வழங்குகிறார்.
முழங்கால் மற்றும் தோள் வலி, சிக்கலான காயங்கள், முதுமையில் ஏற்படும் மூட்டு அழற்சி, மூட்டு சீரமைப்பு, குழந்தைகள் மற்றும் இளம் சிறார் எலும்பு மூட்டு நலம், முழங்கால், மூட்டு, இடுப்பு தோள்பட்டை இணைப்புகளை முழுமையாக மாற்றி பொருத்துதல், முதுகெலும்பு பிரச்சினைகள், வளைந்த முதுகுத்தண்டு, முதுகு மற்றும் கழுத்து வலி, போன்ற அணைத்து விதமான தலைப்புகளிலும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் முதன்மை அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் Dr ராகேஷ் B ஷெட்டி அவர்கள், தனது 18 ஆண்டுகால அனுபவத்தில் எண்ணற்ற அறுவைசிகிச்சைகளை திறம்பட வழங்கியுள்ளார்.
குறிப்பாக 500க்கும் மேற்பட்ட ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், நாள்பட்ட முதுகு வலிக்கான தீர்வை வழங்கும் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை, தடகள விளையாட்டுகளின் போது நிகழும் காயங்களுக்கான சிகிச்சைகள், போன்றவற்றை 9000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக வழங்கியுள்ளார்.
கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு (Physiotherapy and Rehabilitation) சேவைகளும் வழங்கப்படுவதால், முழுமையான சிகிச்சை சேவைகளை பெற முடியும்.
இந்தியா முழுவதுமுள்ள சிறுநகரங்களில் இதுபோன்ற சேவையை அப்போலோ ஆற்றி வருகிறது.
சென்னை அப்போலோவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களிடம் நோயாளிகள் ஆலோசனை பெற இந்த தகவல் மையம் உதவும்.
தொற்றாநோய்களை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அவர்களுக்கு சிகிச்சையும் இந்த மையங்கள் அளிக்கும். சென்னையிலிருந்து மருத்துவர்கள் வாரந்தோறும் இந்த மையத்தில் ஆலோசனை வழங்குவார்கள். மேல்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் சென்னை செல்ல பரிந்துரைக்க படுவார்கள்.
அப்போலோ மருத்துவ குழுமம் நாடு முழுவதும் 300 மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களை கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ தகவல் மையங்களை அமைத்துள்ளது.