தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மூலனூர் கிழங்குண்டல் அருகே உள்ள பாப்பாயபாளையம் கிராமத்தில் jws தனியார் நிறுவனம் மின்சாரம் கொண்டு செல்ல உயர்மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கனவே ஏராளமான உயர்மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது கிழங்குண்டல் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள பனைமரம் மற்றும் வேப்பமரம், புளியமரம், போன்ற மரங்களை வெட்டியும் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை ஆக்கிரமித்தும் சாலையின் இரு புறங்களிலும் மின்கம்பங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த மின் கம்பங்கள் அமைக்கும் பணிக்கு ஏற்கனவே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள். தற்போது தொடர்ந்து மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கிழங்குண்டல் பகுதியில் ஒன்று திரண்டு 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயர்மின் கம்பங்கள் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து jws நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவரை தரிக்கையில்
மேலும் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் பல மனுக்கள் கொடுத்தும் பல போராட்டங்கள் செய்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்கவில்லை
கிழங்குண்டல் பகுதியில் அமைத்து வரும் மின்கம்பங்கள் சாலையின் இரு புறங்களிலும் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலைகளிலும் மின் கம்பங்களை அமைத்து வருகிறது 33-கேவி மின்திறன் கொண்ட மின்கம்பங்களை அமைக்கும்போது சாலையில் பேருந்து மற்றும் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடைவெளி இன்றி அமைத்து வருகின்றனர்.
கிராமமே பசுமை ஊராட்சி என பெயர் பெற்றது ஆங்காங்கே மரங்களை வைத்து போர்டுகள் வைத்துள்ளனர். ஆனால் jws நிறுவனம் தற்பொழுது வேலை செய்யும் பொழுது அனைத்து மரங்களையும் வெட்டி சாய்த்து உள்ளனர் தமிழ்நாட்டின் அடையாளமாக உள்ள 100-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியுள்ளனர். தமிழக அரசு பனை மரங்களை வெட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மின்கம்பங்கள் அமைப்பதற்காக பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. விவசாயிகள் காத்தாடி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எதிராக செயல்படவில்லை அதே நேரத்தில் சாலையின் இரு புறங்களிலும் தனியார் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் நாளை விவசாயின் விளைநிலங்களுக்கு மின்கம்பங்கள் அமைக்க முடியாது மேலும் அதே பகுதியில் ஆடுகள், மாடுகள், மேய்வதால் மின் கம்பங்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் பாதிப்படைந்து மாடுகள் சினை பிடிக்காது கோழிகள் இறந்துவிடும் மரங்கள் காய்ந்து விடும் முற்றிலும் விவசாயமே அழிந்து பாலைவனமாக மாறிவிடும் எனவே jws தனியார் காத்தாடி நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டு புதை வலி கேபிள் வழியில் நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம் என இவ்வாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.