தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மழலைச் செல்வங்கள் பங்கேற்ற காய்கறிகள் மற்றும் பழங்களின் அணிவகுப்பு எனும் உரை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மழலைச் செல்வங்களால் பள்ளி வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியில் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள சத்துக்கள், அவற்றை உண்பதினால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை மழலைகள் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்
தாளாளர் ஆர். ஜே.வி பெல், செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளியின் முதல்வர் மான்சி கே. மத்தாய், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்து மழலைச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். முடிவில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மான்சி கே. மத்தாய் அனைவருக்கும் நன்றி கூறினார்.