கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே மூட்டை மூட்டையாக கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தோட்டத்து குடோனில் அரசு அதிகாரிகள் ஆய்வு…….
கேரளாவில் எங்கிருந்து கழிவுகள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விசாரணை…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே லப்பா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை அனுப்பும் புரோக்கர்கள் மூலம் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தனது தோட்டத்துக் குடோனில் எந்தவித அனுமதியும் இன்றி வைத்துள்ளார். இரவு நேரங்களில் இந்த கழிவுகளை தீயிட்டு எரிப்பதாக கூறப்படுகிறது இந்த கழிவுகளை இரவு நேரங்களில் எரிப்பதால் அப்பகுதியில் சுவாசக் கோளாறு தோல் நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுஜய், சார் மற்றும் நிதீஷ் ஆகிய மூன்று பேர் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொன்னுச்சாமியின் தோட்டத்திற்கு ஏற்றி வந்துள்ளனர் அப்போது லாரியை சிறைபிடித்த பகுதி மக்கள் போலீசுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுச்சாமி இடம் விசாரித்தனர். இந்நிலையில் தோட்டத்து குடோனில் வைக்கப்பட்டுள்ள மொத்த மருத்துவ கழிவுகளையும் முழுமையாக அவற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்ததால் கேரளா பதிவான கொண்ட லாரியை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கேரளாவில் இருந்து காலவதியான மருத்துவ கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அங்குள்ள புரோக்கர்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் பொன்னுச்சாமி வாங்கி வந்து இரவு நேரங்களில் எரியூட்டுவது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்ட வாரிய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொன்னுச்சாமி மற்றும் கேரளா பதிவின் கொண்ட வாகனத்தில் வந்தவர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கேரளாவில் எந்த நிறுவனத்தில் இருந்து இந்த கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.