பெரியகுளம் அருகில் தாமரைக் குளம் பேரூராட்சியில் தலைவர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி தலைமையிலும் செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலையிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டு அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முன்னதாக நமது இந்திய திருநாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் பாத்திமா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்