தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் தவெக கட்சியின் நிர்வாகிகள் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், இரிப்புரம், திகனாரை, தொட்டமுதிகரை, பணக்கஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடியேற்றிய பின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் நிர்வாகிகள் சித்தராஜ், குமார், ராஜு, ஆதித்யா, மாதேஷா, மணி, ராஜேஷ், கோபாலகிருஷ்ணன், ராஜப்பா, நாகேந்திரா மற்றும் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.