கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது……….
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் என் ஜி ஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் இரண்டு நிமிட மவுன அஞ்சலையும் செலுத்தப்பட்டது.