தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் மமக கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மமக இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
கிளைத்தலைவர் அகமது அலி ரஜாய் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான் முகாமை தொடங்கி வைத்தார்.
மமக செயலாளர் ஜெய்னுலாப்தீன், பொருளாளர் ஜாகிர் உசேன், துணை தலைவர் காஜாமைதீன், ஒன்றிய தலைவர் மகுதண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பீர்மைதீன் வரவேற்றார் மாவட்ட தலைவர் A.நயினார் முகம்மது, மாவட்ட செயலாளர் M.சலீம், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மாநில தொண்டரணி துணை செயலாளர் கோகோ அலி, மூகாம்பிகா மருத்துவமனை பிஆர்ஓ நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்