காங்கயம், செய்தியாளர் பிரபு செல் :9715328420
காங்கேயத்தில் திருமண விழாவில் மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
காங்கயம் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற திருமண விழாவிற்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி சிறுவன் கேட்டரிங் வேலைக்கு வந்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களாக டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமண விழாவில் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிய கீழே விழுந்தார். உடனே திருமண வீட்டார் இச்சிறுவனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் இச்சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்