அலங்காநல்லூர்,
திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என பிப்ரவரி 4ஆம் தேதி இந்து முன்னணி சார்பாக போராட்டம் அறிவித்து அலங்காநல்லூர் பகுதியில் வீடு வீடாக வெற்றிலை, பாக்கு வைத்து நோட்டீஸ் வழங்கிய இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், சிவகுமார், ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை கண்டித்தும் திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க கோரியும் அலங்காநல்லூர் காவல் நிலையம் முன்பாக ஒன்றிய துணை தலைவர் சேகர், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுரேந்திரன், கிளை செயலாளர் முருகன், தலைவர் கணேசன், இடையபட்டி முருகன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கைது செய்த இந்து முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.