கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்ட அமைப்பின் சார்பில் கிராம சேவை நாட்டின் தேவை என்னும் மையப் பொருளில் சிறப்பு முகாம் கம்பம் புதுப்பட்டி காக்கில் சிக்கையன்பட்டி கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவிகளால் நடத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை இரா தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்
புதுப்பட்டி கிராம அனைத்து சமுதாய பொதுமக்கள் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம் கோபாலகிருஷ்ணன் எஸ் பொன் ராம் பி சக்திவேல் எஸ் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் முகாமில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்த பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது போல அணுகுண்டை விட மோசமானது ஒரு முறையே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி ஊர்வலத்தில் இது சம்பந்தமான பதாகைகலை ஏந்தி மாணவிகள் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் அனுமந்தன்பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பசுபதி குமார் தொழில் அதிபர் கே.எம் .பி எல்.ரவி கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா இளங்கோவன் உள்பட கல்லூரி அனைத்து துறை மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்