அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக் கழகம் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடங்கியதையொட்டி உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் மதுரைமாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
விஜய்அன்பன் கல்லாணை, தலைமையில் சோழவந்தான் மாவட்ட செயலாளர்
விஷால்கிருஷ்ணன், முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுநடத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் அம்பேத்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி
கொண்டாடப்பட்டது.
முன்னதாக மாவட்டச் செயலாளர்களுக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்கப்பட்டது. இதில் ஒன்றிய நிர்வாகிகள்
விஜய்ஹரிஷ்,தளபதிரஞ்சித். ராமநாதன் ,சடைச்சாமி, ஜெகதீசன், சையது சுல்தான், பரத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.