காங்கயம்,செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருமணத்திற்கு வந்த இடத்தில் பரிதாபம் – கார்விபத்தில் சிக்கி பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு
கோவை மாவட்டம், ஈச்சனேரி, பாடசாலை வீதியை சேர்ந்தவர் பவித்ரன் வயது 26. இவர் கோயமுத்தூரில் டிரைவராக பணிபுரிந்து வந்துளளார். நேற்று முன்தினம் காங்கயம் சிவன்மலை யின் நடைபெற்ற நண்பரின் அக்கா திருமணத்திற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் தேனீர் அருந்த அவரது நண்பர்களுடன் காரில் காங்கயம் கல்லேரி சாலையின் வழியாக சென்ற போது அங்குள்ள தரைப்பாலத்தில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்துள்ளது.
இதில் பவித்ரனுக்கு தலையில் பலத்த காயமடைந்தது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் பவித்ரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடன் சென்ற மற்ற நண்பர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து காங்கயம் போலிஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.