தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இசை முரசு மர்ஹூம் நாகூர்இ எம் ஹனிபா நூற்றாண்டு விழா மற்றும் பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா எழுதிய சூரிய பிறை நூல் அறிமுக விழா கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
விழாவிற்கு எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் தலைமை வகித்து சூரிய பிறை நூல் அறிமுக உரையாற்றினார்.
பள்ளியின் நிர்வாகி ஏ ஜி செய்யது முகைதீன் சாஹிப் வல்லநாடு துளசி பெண்கள் சட்டக் கல்லூரி முதல்வர் வழக்கறிஞர் முகமது முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் விஸ்வா செல்லப்பா சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நல்லாசிரியர் கே எஸ் ரசூல் அகமது இப்ராஹிம் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை கே ஜே அப்துல் மஜீத் சமரசம் பொறுப்பாசிரியர் வி எஸ் முகமது அமீன் பேராசிரியர் முனைவர் காயல் ப.மு. கண்ணன் எம்ஏ மகபூப் எஸ் எம் முகமது காசிம் பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா ஆகியோர் நாகூர் ஹனிபா வாழ்க்கை வரலாற்றை பேசினார்கள்