கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்.மற்றும் உள்ளிருப்பு போராட்டம்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்களுக்கு யு. ஜி.சி அறிவித்துள்ள ஊதியம் ரூபாய் 50,000 த்தை வழங்கவேண்டியும், ஊதியம் தொடர்பாக நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவை அமல்படுத்த வேண்டியும், G.O 56 – ன்படி பணி நிரந்தரம் செய்யவேண்டியும் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் 3.2.2025 ஆம் தேதி முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.