கோவையில் நடைபெற்ற புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி வருமுன் தடுக்க பரிசோதனைகள் அவசியம் என விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து அஸ்வின் மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேலு தகவல்

கோவை அஸ்வின் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அஸ்வின் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்..

ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறதுஅதன்படி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை அஸ்வின் மருத்துவமனை பெண்கள் பாலிடெக்னிக் லிருந்து வி ஓ சி பூங்கா வரை விழிப்புணர்வு நடை பயணம் நடத்தியது.

இவ்விழாவில் PPG கல்வி நிறுவங்களின் சேர்மன் Dr. L. P. தங்கவேல் கொடி அசைத்து, தலைமை தாங்கினார். Dr. T. அஸ்வின், இயங்குனர், அஸ்வின் மருத்துவமனை, தக்ஷிணாமூர்த்தி, PPG கல்வி நிறுவங்களின் CEO, Dr. பூபாலா, அஸ்வின் மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவர்கள் Dr. கிஷன், Dr. பழனிக்குமார், திரு. ம. இளங்கோ, பொது மேலாளர், சுரேஷ், மார்க்கெட்டிங் மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். PPG நர்சிங் கல்லூரி, PPG அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தங்கவேலு தற்போது அதிகரித்து வரும் புற்றுநோயை தடுக்க ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது அவசியம் எனவும்,குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என குறிப்பிட்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *