பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பாதையாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அறிவிப்பு.
2025ம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் நாளொன்றுக்கு 20,000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் கொங்கூர் பக்தர்கள் ஓய்வு மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு 05.02.2025 அன்று காலை 08-00 மணி அளவில் தொடங்கி வைக்க உள்ளனர்.அனைவரும் வருக என திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.