மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“எங்களுக்குள் எப்போதும் பிரிவினையே இல்லை” என்பது தான் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இந்து, இஸ்லாமிய மக்களின் கருத்தாக இருக்கிறது. முருகர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியவை அமைந்துள்ளன.
இது நாள் வரை இரு மதத்தினருக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் அங்கு இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி தான் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்ற மலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் இப்போதும் நீர்மோர் கொடுத்து உபசரித்து கொண்டிருக்கிறார்
கள். கோவில் நடைபாதைக் கடைகளில் பூஜை பொருட்களை விற்பனை செய்வோரிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இதை யாரும் வித்தியாசமாக
இது வரை பார்த்ததில்லை.திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழா அன்று வேண்டுதல் வைத்திருப்பவர்கள் ஆடு,கோழி ஆகியவற்றை பலி கொடுப்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது மதுரைவாசி
களுக்கோ, திருப்பரங்குன்றம் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கோ புதிய செய்தி இல்லை. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த நிக்ழவில் இந்துக்கள் அங்கு சென்று அந்த படையல் விருந்தை உண்பது வழக்கமான ஒன்றுதான். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த நிகழ்வுகள் இன்று குற்றச் செயலாக பார்க்கப்பட்டு மதவெறி அரசியலாக்க பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று.
விட்டுக் கொடுத்தலும் விலாகாதிருத்தலும் பண்புகளாகிவிட்ட மதுரை மண்ணின் மாண்பு இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்
தலை நகரான மதுரையினை கலவர பூமியாக்க முயற்சி நடக்கிறது. அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்க்கும் சங்பரிவார் அமைப்புகள்தான் மதுரையில் மதவெறி அரசியலை கையில் எடுத்துள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.
திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றிலும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, சோதனைச் சாவடிகளையும், கெடுபிடிகளையும் மீறி அலகுகள் குத்தியும், பக்தர்கள் போன்று இந்து முன்னணி, பாஜகவினர் கோயிலுக்குள் சென்று பா.ஜ.க கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழக போலீசாரின் காவல் மற்றும் கண்காணிப்பு பணியினை
நாம் மிகவும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. அதைப் போன்று இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே உள்ளூர் குழுவினை அமைத்து பேசி தீர்க்காத மாவட்ட நிர்வாகத்தையும் நாம் கண்டிக்க வேண்டியுள்ளது. எளிதாக முடியவேண்டிய சிக்கலை கவனம் செலுத்தாமல் இருந்து பெரிதாக்கியதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு பங்கு உண்டு.தமிழகத்திலுள்ள வழிபாட்டுத்
தலங்கள் பிரச்சனையை வரலாற்று அடிப்படையிலும், வழக்கமான நடைமுறைகள் அடிப்டையிலும் அரசு கையாளவேண்டும். அதைவிடுத்து மதப்பிரச்சனையில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அரசு இடம் கொடுக்கக்கூடாது.
தமிழக மக்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கவேண்டும். திருப்பரங்குன்றத்தில்இந்து-முஸ்லீம் மக்களிடையே மோதலை உருவாக்க திட்டமிட்டு செயல்படும் சங்பரிவார் அமைப்புகள் மேல் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதவெறி தீவிரவாதத்தை தடுக்க மத நல்லிணக்க குழுக்களை தமிழகம் முழுவதும் உருவாக்கி மதவெறி இல்லாத தமிழகத்தை நாம் உருவாக்க வேண்டும்.அமைதியை நிலைநாட்ட வேண்டும் என
சமம் குடிமக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் தெரிவித்துள்ளார்.