மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா…..

மதுரை மீனாட்சி அம்மன் கோயி லில் வண்டியூர் மாரியம்மன் தெப்பத் திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்து டன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

தெப்பத் திருவிழாவின் 10 நாளான நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் சுவாமி சன்னதியில் இருந்து தங்கச் சப்பரத்தில் அம்மன், பிரியாவிடையுன் சுவாமி புறப்பாடானார்.

அம்மன் சன்னதி, பூக்கடை வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக வந்த அம்மன், சுவாமி தெப்பக்குளம் மேலரத வீதியில் உள்ள முக் தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். பின்னர் தெப்பம் தயார் நிலையில் உள்ளதா ? என பார்க்கும் வகையில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சிநடைபெற்றது.

மாலையில் ரிஷப வாகனங்களில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினர். பின்னர் முக்தீஸ்வரர் கோயிலில் இருந்து காமராஜர் சாலை, வெங்கலக்கடைத்
தெரு, கீழ ஆவணி மூல வீதி, சொக்கப்ப நாயக்கன் தெரு, சித்திரை வீதிகள் வழியாக அம்மன் சன்னதி அடைந்து, மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீண்டும் எழுந்தருளினர்.

இதனை தொடர்ந்து நேற்று 11ம் நாள் திருநாளை முன்னிட்டு சுவாமி, அம்மன் கோயிலில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பாடாகி கீழமாசி, கீழவெளி வீதி. சிந்தமாணி சாலை வழியாக அய்யனாபுரம் ஸ்ரீரங்கத்தம்மாள் மண்டகப் படியில் எழுந்தருளினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவில் நேற்று கதிர் அறுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இன்று தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலில் எழுந்தருளினர். சித்திரை வீதிகள். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, யானைக்கல், நெல் பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் அடைகின்றனர். தெப்பகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 25. 5 அடி உயர தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து தேரை மைய மண்டபத்தைச் சுற்றி காலையில் 2 முறை இழுத்து வந்தனர். .

பின்னர், மைய மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளிட பூஜைகள், தீபாராதனை நடைபெ றும். மாலை தெப்பத்தில் மீண்டும் சுவாமி, அம்மன் எழுந்தருள்கின்றனர். அப் போதும் தெப்பத்தை ஒரு முறை சுற்றி வரும். பின்னர் தங்கக்குதிரை சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருள் வர் தொடர்ந்து காமராஜர் சாலை, கீழமாசி வீதி. அம்மன் சன்னதி வழியாக கோயிலை வந்தடைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *