காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி (ஸ்ரீராமானுஜர்) கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் பல வருடங்களாக முறைகேடுகள் நடைபெறுவதாக கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது
அதில் பல வருடங்களாக பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர் ரவிச்சந்திரன் இவரை மீண்டும் பணியில் சேர்த்தது, புதியதாக கட்டப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை பல வருடங்களாக பராமரிக்காமல் பொதுமக்களை அனுமதிக்காமல் இருப்பது, இது தவிர காலம் காலமாக நடைபெறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார உற்சவத்திற்கு பல்லக்கு தூக்கும் நபர்களுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை இந்த பணியில் எடுத்தது உள்ளிட்ட முறைகேடுகளை சுட்டிக் காட்டியும் இதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் கூறி ஸ்ரீபெரும்புதூர் அஇஅதிமுக மற்றும் பல்லக்கு தூக்குபவர்கள் இணைந்து ஆதிகேசவ பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜா இளம்பருதி யிடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்ரீபெரும்புதூர் நகரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்