மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேச்சு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளூர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றிய பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசியது, மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் போன்ற கீதங்களை தவறாமல், பிழை இல்லாமல் எழுத வேண்டும். திரைநட்சத்திரங்களை கொண்டாடும்

இன்றைய இளைய சமுதாயம் தன்னலம் பாராமல், உங்களுடைய வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மாணவர்கள் சமூக பற்றுடன் திகழ வேண்டும்

உங்கள் நலனுக்காக பாடுபட்டு உழைக்கும் அரசு அதிகாரிகள் காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் பெயர்களையும், அவர்களுடைய பணிகளையும் நன்கு புரிந்து கொள்ள புரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு இன்றைக்கு கல்வி மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

இந்த வாய்ப்புகளை எல்லாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நன்கு படிக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற நிலைகள் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் மாணவர்கள் திட்டமிட்டு முயற்சி செய்து படித்தால் இலக்கை அடையலாம்.

வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் பொழுது தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியமானது என்றார். மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும்.

உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது

இதனால் பல்வேறு இடர்பாடுகள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீர், நிலம், காற்று மாசு படிவதால் புவி வெப்பமடைந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய நிலைகளை உணர்ந்து மாணவர்கள் புரிந்து கொண்டு வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விழாவில் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செழியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெக வீரபாண்டியன், பாமக மாவட்ட தலைவர் கோ.சு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *