பாப்பிரெட்டிப்பட்டி,
கடத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் ரேகடஅல்லி கிராமத்தில் உள்ள பெரியக்கா மலை மீது எழுந்தருளிஇருக்கும் தென்பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி முருகர் திருத்தளத்தில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை அடுத்து திருத்தேர் ஊர்வலம், பால்குடம் அழைத்தல், காவடி ஆட்டம்,மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பாலபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
தமிழ் பாராயண வழிபாடு, கற்பூர போராளி, திருநீர் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைஅடுத்து நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்கு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அப்பர் மடம் சார்பில் திருமுறை பாராயணம் நடைபெற்றது .
தொடர்ந்து இரவு திருத்தேர் திருக்கோவில் சுற்றி கிரிவலம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் தேவஸ்தன நிர்வாக குழுவினர். செய்து யிருந்தனர்.