தென்காசி,
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னதாக முக்கூடல் அரிராம் சேட் 61 வது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் 23 2.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பவர்வடகரையில் உள்ள அன்னை அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெறும் போட்டி தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தில் அதிகமான மாணவ மாணவிகளை வரச் செய்து பயன்பெற செய்ய வேண்டும் என்றார்.
மேலும் முக்கூடல் அரிராம் சேட் இன்று புகழ் பெற்று விழங்கும் பல கல்லூரிகளுக்கு நிதி உதவி செய்தவர் என்றும் சிவசைலத்தில் உள்ள ஔவை ஆசிரமத்திற்கு தானமாக இடம் வழங்கியவர் என்றும் பாவூர்சத்திரம் பகுதி மக்கள் பயன்படுகின்ற வகையில் தபி சொக்கலால் மேல் நிலை பள்ளியை கட்டி தொடங்கியவர் என்றும் நாடகக் கலைஞர்களை திரைப்படக் கலைஞர்களை சங்கீத வித்துவான்களை பணம் கொடுத்து ஊக்குவித்தவர் என்றும் ஏழை எளிய மக்கள் முன்னேற அள்ளிக் கொடுத்த வள்ளல் என்றும் புகழாரம் சூட்டினார் மேலும் தமிழக அரசு முக்கூடலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அரிராம் சேட் அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வதாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஜான் டேவிட் பொருளாளர் சுப்பிரமணியன் மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் தென்காசி மாவட்ட கல்வி குழு துணை தலைவர் முப்புடாதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.