எல்.எண்டத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1990 – ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்தஎல்.எண்டத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1990 – ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 1990 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பழைய நினைவுகளைபகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவிகள் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் குழந்தைகள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பள்ளி வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினர்.