பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பிலாக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த குழந்தைவேல் மகள் இளவரசி என்பவர் தனது தந்தை வழியில் கிடைக்கப்பெற்ற பூர்வீக பட்டாவில் ஓட்டு வீட்டிலும் பின்னர் அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்று கான்கிரீட் வீடு கட்டி அதற்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் வரி, நூலக வரி செலுத்தியும் அவ்வீட்டில் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்ததாகவும், தற்போது வருவாய்த் துறையில் தவறாக வழங்கியுள்ள பட்டாவை வைத்துக் கொண்டு அவரது உறவினரான சேகர், செல்வம் குடும்பத்தினர் தனது வீட்டை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோடு தனது வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி வந்ததாகவும் அதனை தட்டிக் கேட்டதால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அடிக்கடி தரக்குறைவாக திட்டியும் தாக்கியும் வந்துளளனர்.
இதன் சம்பந்தமாக இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் எதிரிகள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது மேலும் உயர் அதிகாரிகளுக்கும் ஆன்லைனில் புகாரும் பதிவு ஆன காரணத்தால் தனது வீட்டில் குடியிருக்க விடாமல் எதிரிகள் தனது வீட்டின் கதவினை பூட்டி வைத்துக் கொண்டும், கொலை மிரட்டல் விடுத்தும் மிரட்டி அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும் அதன் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் உரிய பலன் இல்லை என்றும்
தற்போது விசாரணை மேற்கொண்டு எதிரிகளிடமிருந்து தனது வீட்டை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீட்டு மனு கொடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் மூலம் நியாயம் கிடைக்கும் என தான் முழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்
இது குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் துறை தலைவரும் தனக்கு பயம் கிடைக்க ஆவண செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்