திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் என முறையே பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாள் நிகழ்வாக முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முருகன் விழாவை நடத்திச் சென்றார். முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் தமிழக அரசின் நடத்திட்ட உதவிகள் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கினார்.
அனைத்து துறைத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் பேசினார்கள். நிகழ்ச்சியில் பெற்றோரின் பாடல் மற்றும் வழிகாட்டும் முறை இடம்பெற்றது.
நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு கணினி துறை மாணவி கௌரி தொகுத்து வழங்கினார். மாணவன் சஞ்சய் பாடினான், இயந்திரவியல் துறை மாணவன் அஸ்வின் இந்த ஆண்டின் துறை சார்ந்த நிகழ்வுகளை வாசித்தார். முதலாம் ஆண்டு ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் கலந்து கொண்டனர்.