கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காதப்பாறை ஊராட்சியில் அமைந்துள்ள வெண்ணமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச தேர் திருவிழாவில்,கரூர் மாவட்ட திமுக கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான
வி.செந்தில்பாலாஜி கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார்
பின்னர் கோயிலில் முன்பு பொதுமக்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வந்தானர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.