கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சேங்கல் ஆகிய பகுதிகளில் தோழர்களம் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தந்தை பெரியாரின் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் நெய்வேலி அசோக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
உரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு செய்தியை மக்கள் மத்தியிலும் ஊடக வாயிலாகவும் தெரிவித்து இருந்தார்.
சீமான் அவதூறு பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக திருவிளையாடல் புராணத்தில் படலம் 26 இல் உள்ளவற்றை சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக பதிவு செய்தார். இச்சூழ்நிலையில் பொதுச் செயலாளரின் வீட்டை சமூகவிரோதிகள் திட்டமிட்டு தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்
மேற்படி சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யும் தோழர்களம் சார்பில்
நிறுவனர் & தலைவரான தி. க. சண்முகம் கூறியுள்ளார்.