எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் ரூ.21 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம்,ஒரு மனநல காப்பகக் கட்டிடம் கட்டுமான பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இங்கு வரும்போதேல்லாம் மன வருத்தத்துடனும்,துயரத்துடனும் வருவேன் தற்போது மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன் என பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாதல்படுகை மற்றும் முதலைமேடு கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தலா ரூ.7.92 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் தங்குமிடம்,சமையலறை,கழிவறை மற்றும் கால்நடைகள் பாதுகாப்பிடத்துடன் கூடிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுமான பணிகளையும், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட புளிச்சக்காடு கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மன நலக் காப்பக கட்டிடம் ரூ.21 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி,சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன்,எம்.பன்னீர்செல்வம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நாதல் படுகையில் பேசுகையில்.
வெள்ளம் பாதித்த போது இந்த பகுதிக்கு பலமுறை வந்திருக்கிறேன்.அப்போது வரும்போதேல்லாம் மன வருத்தத்துடனும்,துயரத்துடனும் வந்திருக்கிறேன் ஆனால் தற்போது மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்.இந்த பகுதிக்கு சாலை வசதி கேட்டீர்கள்.ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் 6.5 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.3.45 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படுவதால் சாலை ஆக்கிரமிப்பு அகற்றிதர அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.சாலைஅமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற வில்லை எனவே அடுத்த 17 ம் தேதி இந்த சாலை பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றிருக்கிறது என்பதை நேரில் பார்க வருவேன்.எனவே சாலை பணிகளை துரிதப்படுத்துங்கள்.புயல் பாதுகாப்பு மையத்தை ஆறு மாத காலத்தில் கட்டிமுடிக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் மற்றும் தேவையான பொருட்கள் தேவைப்பட்டால் என்னையோ ஆட்சியரையோ தொடர்பு கொண்டால் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம்.மேலும் இந்த புயல் பாதுகாப்பு மையத்தை பேரிடர் காலங்களில் மட்டுமல்லாது சுபநிகழ்ச்சிகளையும் நடத்திக்கொள்ளலாம்,மாணவர்கள் பங்கு பெறும் பயிற்சி வகுப்புகள், போட்டிகளை இங்கே நடத்திக்கொள்ளலாம்,நம் வீட்டைப்போல் வருடத்திற்கு 300 நாட்கள் பயன்படுத்தி புயல் பாதுகாப்பு மையத்தை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.