மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் டார்வின் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார்.
டார்வின் வாழ்க்கை வரலாறு, அவரது பயணங்கள், ஹெச்.எம்.எஸ்
பீகில் கப்பல் பயணம், சேகரித்த தரவுகள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு, அறிவியல் மனப்பான்மை, உயிரினங்களின் தோற்றம் நூல், தக்கன பிழைக்கும் கோட்பாடு ஆகியன குறித்து தலைமை ஆசிரியர் தென்னவன் பேசினார். டார்வின் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.
வினாடி வினா நடைபெற்றது. சரியான விடை அளித்த குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை அனுஷியா நன்றி கூறினார்.