திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவப் பீடத்தில் 16- ஆம் ஆண்டு தைப்பூச பௌர்ணமி திருவிழா நடைபெற்றது. விழாவில் காலை 7 மணிக்கு திருமடத்தில் அன்னதான கொடியேற்றுதல் அதனைத் தொடர்ந்து அகவல் பாராயணம் நிகழ்ச்சியும், காலை10 மணி முதல்11 மணி வரை மன்னை இரா. அரங்கசாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. காலை 11:30 மணிக்கு வள்ளல் பெருமானுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12- மணிக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் ஆன ஆர்.காமராஜ், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி மற்றும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மகான் பாடகச்சேரி ஸ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான மற்றும் கல்வி அறக்கட்டளை, பாடகச்சேரி கிராம வாசிகள், இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.