கரூர் செய்தியாளர் மரியான் பாபு

புகழிமலை ஆறுநாட்டார் மலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச தேர்த்திருவிழா..
கரூர் மாவட்டத்தை அடுத்துள்ள புகலூரில் அமைந்துள்ள புகழிமலையில் ஆறுநாட்டார் மலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ மற்றும் நகர கழகச் செயலாளரும், புகலூர் தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து திருவீதி உலாவினை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில், நகர்மன்ற துணைத் தலைவர் P.S.பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாக அலுவலர்கள், ஆன்மீக பெருமக்கள், பொதுமக்கள் என ஏராளமானனோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.