மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வக்ஃப் மசோதா நகலை தீ வைத்து எரித்தும், கிழித்தெறிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் வக்ஃப் மசோதா நகலை தீ வைத்து எரித்தும், கிழித்து எறிந்தும் அக்கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சபிக் அகமது தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோங்களை எழுப்பினர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிசார் எரிக்கப்பட்ட மசோதா நகல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.