வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழநடுவலூரில் (12-02-2025) 2023 – 2024 சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 9.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிடத்தையும் மற்றும் இரண்டு பயணியர் நிழல்குடைகளையும் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் ரூ2லட்ச மதிப்பீட்டில் ஒரு உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையும், மாவட்டச் சேர்மன் நிதியில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் ஒரு உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையும் (ஸ்மார்ட் கிளாஸ்) எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மற்றும் மாவட்ட சேர்மன்(மு)தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர்.
முன்னதாக எம்எல்ஏ ஸ்டாலின்குமார் மற்றும் மாவட்டச் சேர்மன் (மு) தர்மன் ராஜேந்திரன் ஆகியோருக்கு கும்பம் மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கூட்டுறவு சார்பதிவாளர் வினோத்குமார், வட்ட வழங்கல் அலுவலர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன்(மு)சரண்யா மோகன்தாஸ்,ஒன்றிய செயலாளர்கள் சிவசரவணன், வீரபத்திரன்,இலக்கிய அணி மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் மாவட்ட பிரதிநிதி செல்வகுமார்,பொதுக்குழு பூபதி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், கிளை செயலாளர், கூட்டுறவு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சந்திரசேகர், கிழக்கு ஒன்றிய பொருளாளர் மளிகை கடை ஜெயராமன், பிரதிநிதி டீ கடை சேகர், பிரகாஷ், மாஸ்டர் முருகேசன், சொரத்தூர் பொன்னுசாமி, விற்பனையாளர்கள் மகேஸ்வரி, கார்த்திகா,வளர்மதி, அங்காயி, அரவிந்த், சுந்தர்,விஜயலட்சுமி, வேல்முருகன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்