தேனி அரசு மருத்துவமனையில் அவசரத் தேவைக்கு இரத்ததானம் வழங்கிய இராணுவ வீரர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாத்தானோடை பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு நேற்றிரவு அவசர அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. உதவிக்கு யாரும் முன்வராத நிலையில் குள்ளப்புரத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் மணிகண்டன் இரத்த தானம் வழங்க முன் வந்தார்
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு ராணுவ வீரர் இரத்ததானம் செய்ததையடுத்து அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டு அந்தப் பெண் நலமுடன் உள்ளார்.
அவசர தேவையறிந்து விலைமதிப்பற்ற மனித உயிர் இந்த மண்ணில் வாழ இரத்த தானம் வழங்கிய ராணுவ வீரரின் சேவையை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு முத்து சித்ரா மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் இராணுவ வீரரை மனதார பாராட்டினார்கள் இந்தச் செயலால் குருதிக் கொடை என்னும் இரத்த தானம் தானத்தில் சிறந்தது இரத்ததானம் என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது