மதுராந்தகம் அருகே விவசாய பணி மேற்கொண்ட கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் இவரது மகன் புனிதவேல் வயது 20 என்பவர் தனது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மேலும் தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.