வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தலைமையில் 25ஆம் ஆண்டு கொடி தின கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் முன்னிலையில் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் தேமுதிக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, நகரச் செயலாளர் சங்கர், மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கொத்தம்பட்டி குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கிருஷ்ணசாமி, தாமரைச்செல்வன், ஒன்றிய பிரதிநிதி பெரியண்ணன், கிளைச் செயலாளர் அய்யம்பாளையம் செல்வம், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் முருகேசன்,மாவட்ட பிரதிநிதி மாமுண்டி, ஒன்றிய பிரதிநிதி பெரியண்ணன், பொருளாளர் செல்வம், பொம்மலிங்கம்,தலைவர் குமார், துணைப் பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி வி எஸ் சரவணன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.விழா ஏற்பாடுகளை கொத்தம்பட்டி கிளை கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.