தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 11, 20, 21, ஆகிய வார்டு பாக முகவர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயக்குமாா் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்
கடந்த காலத்தில்அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டங்களும் முறையாக நடைபெறவில்லை.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றப் பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகின்றார்.
கடந்த மழை காலங்களில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில பாதிப்புகள் ஏற்பட்ட போது அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தது நாம் தான். எதிர்கட்சியினர்
எந்த பகுதியையும் எட்டிப்பார்ப்பதற்கு கூட வரவில்லை. மக்கள் நலன் தான் முக்கியம் என்று நாம் எப்போதும் பணியாற்றுகிறோம். தேர்தல் நேரங்களில் மட்டும் எல்லா பணிகளையும் அவர்கள் செய்ததை போல் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு கேட்க வருவார்கள்.
அதற்கு நாம் இடமளித்து விடக் கூடாது. தளபதியார் ஏற்கனவே கூறியதை போல் தமிழகத்தில் 200 தொகுதிகளில் 2026ல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார்.
நாம் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பான முறையில் மக்களோடு மக்களாக பழகி திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை வீடுதோறும் கொண்டு சேர்த்தால் போதும். அதை நாம் வாக்கு வங்கியாக மாற்றி தேர்தல் நாள் அன்று உதய சூரியன் சின்னத்திற்கு பதிவு செய்ய வேண்டிய பணிகளை மட்டும் சரியாக செய்ய வேண்டும்.
234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று விடலாம். தூத்துக்குடி உள்பட வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதே நிலையை 2026-லும் நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.நோகாமல் நுங்கு திண்ணலாம் என்ற எண்ணத்தில் யாரும் இருக்க கூடாது கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் இன்றிலிருந்தே சபதம் ஏற்று கொள்ளுங்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி பார்வையாளரும், மாநில இளைஞரணி துணைச்செயலாளருமான இன்பாரகு, கோவில்பட்டி தொகுதி பார்வையாளரும் மாநில விவசாய அணி துணைச்செயலாளருமான கணேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், தெய்வேந்திரன், முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டப்பிரதிநிதி அருணகிாி, அவைத்தலைவர் அற்புதராஜ், மற்றும் சண்முகசுந்தரம், ராஜாபாக்கியத்துரை, குமாஸ்தா சுப்பிரமணி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.