திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் திருநீலகண்டியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில்6 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு ஆறு இணையர்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்

மேலும் கட்டில் பீரோ ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளடங்கிய96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை தொகுப்புகளை 6 இணையர்களுக்கு வழங்கினார் நல்லறத்தோடு இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று திருமண இளையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *